குடியரசு தினவிழாவின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - பாஜகவை குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி

காந்திக்கு விருப்பமான "அபிட் வித் மீ" பாடலை குடியரசு தின இசை பட்டியலில் இருந்து நீக்கியதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் மத்திய அரசு சிக்கியுள்ளது.
குடியரசு தினவிழாவின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - பாஜகவை குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி
x
குடியரசு தினவிழாவின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - பாஜகவை குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி 

காந்திக்கு விருப்பமான "அபிட் வித் மீ" பாடலை குடியரசு தின இசை பட்டியலில் இருந்து நீக்கியதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் மத்திய அரசு  சிக்கியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகளும் டெல்லி ராஜபத் சாலையில் பாசறை திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வின் போது, முப்படையை சேர்ந்த இசை குழுவால் கதம் கடம் பதாயே ஜா,சாரே ஜஹான் சே அச்சா உள்ளிட்ட பாடல்கள் இசைக்கப்படும். இதில் மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடலான "Abide With Me" என்ற பாடலும் இசையமைக்கப்படும். ஆண்டுதோறும் இந்த பாடல் இல்லாமல் குடியரசு தினம் நிறைவடையாது.  ஆனால், கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த பாடல் இடம்பெறாததால் எழுந்த கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால் 2021ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் அந்த பாடல் இடம்பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் காந்திக்கு பிடித்த அபிட் வித் மீ பாடல் மீண்டும் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமர் ஜவான் ஜோதி இடமாற்றம், காந்திக்கு விருப்பமான பாடல் நீக்கம் உள்ளிட்டவைகள் வரலாற்றை திட்டமிட்டு பாஜக மறைப்பதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்