“200-க்கு 200 வெற்றி...“ அமைச்சர் சேகர்பாபு கணக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் திமுக அமோக வெற்றி பெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் திமுக அமோக வெற்றி பெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்