"இனி இந்தியாவில் எங்கும் காங்கிரஸ் இருக்க கூடாது" - ஆட்டை பலி கொடுத்து பழி தீர்த்த சம்பவம்
பதிவு : ஜனவரி 09, 2022, 07:00 PM
மதுரையில் ஆட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் பெயரை சூட்டி, பலி கொடுத்த பாஜகவினரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்தார். இதனால் பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தால் கொந்தளித்து போன பாஜகவினர், பல்வேறு இடங்களில் பிரதமர் நீண்ட ஆயுள் பெற வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். 

ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று, காங்கிரஸ் மீதான தங்களின் கோபத்தை ரத்த பலி கொடுத்து தணிய வைத்துள்ளனர், மதுரை பாஜகவினர்... 

வெள்ளியன்று பூட்டியிருந்த மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் வாசலில் சூடம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்திய பாஜகவினர், பின்னர் ஆடு ஒன்றை வரவழைத்து அதன் தலையில், இந்திய தேசிய காங்கிரஸ் என்ற வாசகத்தை அணிவித்து, பலி கொடுத்து... பிரதமர் அவதிக்கப்பட்டதற்கு பழி தீர்த்துள்ளனர்.அதோடு நிறுத்தாமல் வெட்டப்பட்ட ஆட்டை சமைத்து அனைவருக்கும் விருந்தும் வைத்துள்ளனர். 

பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாத காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவில் எங்கும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே ஆட்டை பலி கொடுத்ததாக தெரிவித்தார், பாஜகவின் இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கரபாண்டியன்.

இதனிடையே, பாஜகவினரின் இந்த செயலை கண்டித்து, அதே மதுரையில்  மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், தல்லாகுளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளி, சனி, ஞாயிறு அன்று கோயில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அத்துமீறி கிடா வெட்டிய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

373 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

218 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

22 views

பிற செய்திகள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

7 views

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

11 views

ஞாயிறு முழு ஊரடங்கை மீறி - பொதுமக்களுக்கு இலவசமாக கரும்பு வழங்கிய மர்ம நபர்

மதுரவாயல் பகுதியில் ஞாயிறு முழு ஊரடங்கை மீறி மர்ம நபர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக கரும்பு வழங்கியுள்ளார்.

12 views

திருவண்ணாமலை கோயிலுக்கு செல்ல தடுப்பூசி அவசியம் - மாவட்ட ஆட்சியர்

நாளை முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

37 views

ஞாயிறு முழு ஊரடங்கு : கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய சாலைகள் ! - கழுகு பார்வை காட்சி

ஞாயிறு முழு ஊரடங்கு : கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய சாலைகள் ! - கழுகு பார்வை காட்சி

47 views

#BREAKING : பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING : பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.