"அரசுக்கு எதிர்பாராத செலவினங்கள் - ரூ.3,719 கோடி"
பதிவு : ஜனவரி 08, 2022, 02:10 AM
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான மதிப்பீடு மற்றும் துணை மானியக் கோரிக்கை குறித்த அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதில், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் 3 ஆயிரத்து 719 கோடி ரூபாய் எதிர்பாராத செலவினங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க 887 கோடி ரூபாயும்,

கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கியதற்காக 132 கோடி ரூபாயும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாவும்,

கனமழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 300 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் கல்வி கட்டணங்களுக்காக 74 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.