"பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்"
பதிவு : நவம்பர் 30, 2021, 06:02 PM
பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாடங்களை நடத்தி முடிக்க 6 மாதம் தேவை என்பதால், பொதுத் தேர்வை மே மாதத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மாணவர்கள் தேர்வுக்கு நிம்மதியாக தயாராக, பாடங்களை குறைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஒ.பி.எஸ்., கொரோனா பரவல் மற்றும் மழை பாதிப்பால், மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஏற்பட்ட சிக்கலை கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.   

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.