முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு : திமுக எம்.பி.ரமேஷ் ஜாமின் கோரிய மனு - விளக்கம் அளிக்க சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : நவம்பர் 16, 2021, 06:49 PM
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கம் அளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷ் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கம் அளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், எம்.பி. ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் உயிரிழந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

இதையடுத்து ஜாமின் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிராக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையையோ, சாட்சிகளையோ கலைக்கப் போவதில்லை எனவும் மனுவில் உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுவுக்கு விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

608 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

182 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

88 views

பிற செய்திகள்

2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு *நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர்

0 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

8 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

26 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.