"எடப்பாடி பழனிச்சாமி கூறிய பணிகள் நடக்கவில்லை" - அமைச்சர், கே.என்.நேரு
பதிவு : நவம்பர் 12, 2021, 05:50 PM
வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கொளத்தூர், ரெட்டேரி, பெரியார் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர்கள் ஏ.வா வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய பணிகள் முறையாக நடந்திருந்தால் தண்ணீர் தேங்கி இருக்காது எனவும் கே.என்.நேரு கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.