வெள்ள பாதிப்பு நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
பதிவு : நவம்பர் 11, 2021, 04:40 PM
வெள்ள நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தீவிரப்படுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தீவிரப்படுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து பணிகளைத் துரிதப்படுத்த அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், மழை வெள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்கிட அறிவுறுத்திய முதல்வர், 

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திட உத்தரவிட்டார். 

மேலும், துறை அலுவலர்கள் பயிர் சேதங்களைத் தவிர்க்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார். 

மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பார்வையிட்டு அறிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.