மேற்கு வங்கம், ஆந்திரா வரிசையில்... பஞ்சாப்பில் பலம் இழக்கிறதா காங்.?

மம்தா பானர்ஜி, சரத் பவார் வரிசையில் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்... இதனால் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட உள்ள தாக்கம் பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...
மேற்கு வங்கம், ஆந்திரா வரிசையில்... பஞ்சாப்பில் பலம் இழக்கிறதா காங்.?
x
மம்தா பானர்ஜி, சரத் பவார் வரிசையில் காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்குகிறார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்... இதனால் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட உள்ள தாக்கம் பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் கட்சி தலைமையின் அழுத்தம் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவும், அவர் பாஜகவில் இணையலாம் என்றும் தனிக்கட்சியை தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் தான் தனிக்கட்சியை தொடங்கப்போவதாக அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப் விரைவில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. 

இந்நிலையில் மம்தா பானர்ஜி, சரத்பவார், ஜெகன்மோகன் வரிசையில் அமரீந்தர் சிங் தொடங்கும் புதிய கட்சி மாநிலத்தில் காங்கிரசை அசைத்து பார்க்குமா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த 1998 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேற மம்தா பானர்ஜியால் தொடங்கிய திரிணாமுல் காங்கிரஸ் இன்று தேசிய அளவில் மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. 

மம்தாவை போல் காங்கிரசிலிருந்து வெளியேறிய சரத் பவாரால் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சிதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியாகும். 

மகாராஷ்டிராவில் தங்களுடைய ஆதரவின்றி காங்கிரசால் ஆட்சியமைக்க முடியாது என வலுவான நிலையில் இருந்து வருகிறது. 

காங்கிரஸ் பலமாக இருந்த மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் அக்கட்சியிலிருந்து பிரிந்த, ஜெகன் மொகன் ரெட்டியால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அசுர பலத்துடன் உள்ளது. மேற்கு வங்கம் வரிசையில், ஆந்திராவும் காங்கிரஸ் கையைவிட்டு நழுவியது. 

1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், புதுச்சேரியில் மட்டும் அரியணையை தக்க வைத்தது. அங்கு காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய ரங்கசாமியால் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்.ஆர். காங்கிரஸ், காங்கிரசுக்கு எதிராக வலுவான கட்சியாக இருக்கிறது.

மத்தியில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்த பின்னர் பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துவிட்ட காங்கிரஸ், பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

மறுபுறம் அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடிக்க வரிந்துக்கட்டி நிற்கின்றன. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மாநிலத்தில் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் பாஜக, அமரீந்தர் சிங்குடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது.

ஆனால் வேளாண் சட்ட விவகாரம் தொடர்பாக கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க தயக்கம் காட்டும் அமரீந்தர் சிங், தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுடன் பேசுவதாகவும், அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக சொல்லவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மம்தா, சரத்பவார், ஜெகன் மோகன் ரெட்டி போன்று அமரீந்தர் சிங் ஜொலிப்பாரா என்பதற்கு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் விடை சொல்லும்...


Next Story

மேலும் செய்திகள்