பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் : "பதிவாகும் பேச்சுகள் பிரதமரிடம் சென்றால்,அது ஓரு கிரிமினல் குற்றம்" - ராகுல் காந்தி
பதிவு : அக்டோபர் 27, 2021, 07:06 PM
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம், அதன் ஆணையர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் பேச்சு பதிவுகள் பிரதமரிடம் செல்லும் என்றால், அது ஓரு கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம், சிறப்பு நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் உண்மை நிச்சயம் வெளி வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் மீண்டும் கோரிக்கை விடுப்போம் என ராகுல் காந்தி கூறினார். ஆனால் இதற்கு பாஜக தயாராக இருக்காது என்பது நிச்சயமான உண்மை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பெகாசஸ் விவகாரம், பல முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாஜக அமைச்சர்கள் என்பது உள்ளிட்ட அனைவரிடமும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி குறை கூறியுள்ளார். 
---

பிற செய்திகள்

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

2 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

23 views

"அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரியானது" - ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்)

அதிமுகவின் கொள்கையை மீறி செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

16 views

#BREAKING : ஜெ. நினைவு இல்லம் - அதிமுக மனு

"ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்தை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்"

11 views

"கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கம்"

அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.