புதிய கட்சி தொடங்கும் அமரிந்தர் சிங் - அறிவிப்பு வெளியீடு
பதிவு : அக்டோபர் 27, 2021, 03:21 PM
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு, தன்னுடைய தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்றார். சித்து பஞ்சாபில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவதாய்த் தெரிவித்த அமரிந்தர் சிங், 117 தொகுதிகளிலும் தமது புதிய கட்சி போட்டி இடும் என்று கூறியுள்ளார். மேலும், மக்களுக்கு அளித்த 92 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக  தெரிவித்த அவர், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரித்த மத்திய அரசின் நடவடிக்கை சரியே என்று தெரிவித்தார். அத்துடன், 3 வேளாண் சட்டங்கள் குறித்து நாளைய தினம் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

7 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

25 views

"அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரியானது" - ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்)

அதிமுகவின் கொள்கையை மீறி செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

18 views

#BREAKING : ஜெ. நினைவு இல்லம் - அதிமுக மனு

"ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்தை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்"

13 views

"கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கம்"

அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.