எஸ்.பி. வேலுமணி குறித்த வழக்கு - தமிழக அரசு தகவல்
பதிவு : அக்டோபர் 20, 2021, 09:14 PM
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும், திமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐ.பி.எஸ்.அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இதன் அடிப்படையில் 129 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி 1132 ஆவணங்களை ஆராய்ந்து தாக்கல் செய்த அறிக்கையில் வழக்குபதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அரசும் வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில், முகாந்திரம் இல்லை எனக்கூறி அரசால் கைவிட முடிவெடுக்கப்பட்ட வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க  வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேற்கொண்டு இந்த விவகாரத்தை நிலுவையில் வைக்காமல் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தொடர்ந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என தெரிவித்தார்.

அறப்போர் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

வேலுமணி தரப்பில் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தனக்கு எதிரான வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு வழக்குகளின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

537 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

101 views

பிற செய்திகள்

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

11 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

16 views

"வேளச்சேரி வீட்டில் இருந்து திருமாவளவன் இப்படி வெளியே வந்தது ஏன்?"விசிக விளக்கம்

வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.