முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது
பதிவு : அக்டோபர் 17, 2021, 12:08 PM
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்த, பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சைபர் கிரைம் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
பாஜக பிரமுகரான கல்யாண ராமன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தர்மபுரி திமுக எம்.பி. செந்தில் குமார் குறித்து கல்யாண ராமன் அவதூறாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எம்.பியின் உதவியாளர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், கல்யாண ராமனை கைது செய்ய சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் வந்தனர். ஆனால், கல்யாணராமன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரமறுத்தார். தொடர்ந்து கல்யாணராமனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். இதனால், போலீசாருடன் பாஜக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கல்யாண ராமன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.