9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி - திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று - முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 13, 2021, 12:20 PM
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, கடந்த ஐந்து மாத ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெறும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த வெற்றி, திமுக அரசு செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரம் என தெரிவித்துள்ள ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தொற்று, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகள் இருந்தாலும் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளார்.

* சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு இருந்த செல்வாக்கை விட, தற்போது செல்வாக்கு அதிகமாகி இருப்பது உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளதாக சுட்டிகாட்டியுள்ள முதலமைச்சர், ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை, ஐந்து மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி என்பதை யாராலும் மறுக்க முடியாது கூறியுள்ளார்.மேலும், மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின்,உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமையட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.