"ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்ட் இடத்தை மீட்டுள்ளோம்" - அமைச்சர் சேகர் பாபு
பதிவு : அக்டோபர் 12, 2021, 02:45 PM
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அறநிலையத்துறையின் தொடர் முயற்சிகளால் அந்த நிலம் தற்போது மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்ட் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.