“மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை“ - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உருக்கமாக தெரிவித்துள்ளார்.
x
தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உருக்கமாக தெரிவித்துள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி, தனது அப்பா வைகோவிற்கு வயதாகி விட்டதால், அவருக்கு ஆதரவாக அரசியலுக்கு வருவதாக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியிருந்தார்.

கடந்த மாதம், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது பெயர் துரை வையாபுரி இல்லை என்றும், இனி துரை வைகோ என்றும் தெரிவித்தார். மேலும், தொண்டர்களைப் போலவே மக்கள் கூறும்போது பதவிக்கு வருவேன் என்று பேசினார்.

இதையடுத்து, வைகோவின் மகன் அரசியலுக்கு வந்துவிட்டதாக,
அரசியல் வட்டாரம் பரபரப்பானது. இருப்பினும், இதுதொடர்பாக வைகோ மவுனம் காத்துவந்தார்.

இந்நிலையில், தனது மகன் அரசியலுக்கு வருவதை, தான் விரும்பவில்லை என வைகோ இன்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
அரசியலில் 56 ஆண்டுகள், தான் நிறையவே கஷ்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

எண்ணற்ற போராட்டங்கள், ஜெயில் வாழ்க்கை என தன் வாழ்க்கையை அழித்துக் கொண்டு கஷ்டப்பட்டதாகவும், இந்தக் கஷ்டம் தன்னோடு போகட்டும் எனவும் கூறினார்.

ஒரு தந்தையாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் வைகோ, வரும் 20ஆம் தேதி நடக்கும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியினரின் முடிவு தெரியும் என்று கூறியிருப்பதால், பொறுத்திருந்து பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்