கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு
பதிவு : அக்டோபர் 01, 2021, 04:18 PM
கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க  கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க, இந்திய "அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம்" அனுமதி வழங்கியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்,கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட 5 மற்றும் 6வது அணு உலை விரிவாக்கக் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி, அணு உலையினை நிரந்தரமாக மூட வழிவகைச் செய்ய வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.


பிற செய்திகள்

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

18 views

தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு... நேரில் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை நேரில் வழங்கினார்.

17 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

19 views

9 Pm Prime Time Headlines

பணியிடங்களில் கட்டுப்பாடுகள்

26 views

7 மணி தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.