உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல்
பதிவு : செப்டம்பர் 26, 2021, 10:13 PM
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
 
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் எஞ்சியுள்ள 28 மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
 
இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு 98,151 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில்,
 
இதில் ஆயிரத்து 166 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
 
14 ஆயிரத்து 571 வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில், 
 
2 ஆயிரத்து 981 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 
2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் எந்த வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்படாததால், 
 
இறுதியாக 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு, 79,433 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 827 பேரும்,
 
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 ஆயிரத்து 64 பேரும்,
 
கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரத்து 792 பேரும், 
 
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 61 ஆயிரத்து 750 பேரும் போட்டியிட உள்ளனர். 
 
அதேபோல், 28 மாவட்டங்களில் இறுதியாக 418 பதவியிடங்களுக்கு ஆயிரத்து 386 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

525 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

118 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

97 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

51 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

29 views

பிற செய்திகள்

"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.

8 views

"குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்" - டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யாவிட்டால், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதில் எந்த பயனும் இல்லை என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

6 views

நகைகளை வாங்கி ஏமாற்றியதாக கேரள பெண் புகார் - விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொச்சியில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 views

"அரசியல் ஆதாயத்துக்காக திமுக நாடகம்"

7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சாட்டினார்.

8 views

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

25 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.