பஞ்சாப் புதிய முதல்வராக பட்டியலினத்தவருக்கு வாய்ப்பு - காங்கிரசுக்கு பலன் அளிக்குமா?

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சண்ணி பொறுப்பேற்றுள்ளார்.
x
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சண்ணி பொறுப்பேற்றுள்ளார்.  

பஞ்சாப் மாநில அரசியல் வரலாற்றில், முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்சாபில் 32 சதவீதம் மக்கள் பட்டியலினத்தவராக உள்ளனர். இருந்தபோதும், காங்கிரஸ் கட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில் தான், சரண்ஜித் சிங் சண்ணிக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், பட்டியலின மக்களின் ஆதரவை பெறுவதோடு, அமரீந்தர் சிங் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்ய முடியும் என காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

அதேசமயம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை முன்வைத்தே தேர்தலை சந்திக்க உள்ளதாக, காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் தெரிவித்திருப்பதன் மூலம், இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்பது தெரிய வந்துள்ளது.

மொத்தத்தில், சரண்ஜித் சிங் சண்ணியின் நியமனத்தால் பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு முடிவு கிடைத்தாலும், கட்சிக்குள் குழப்பங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்தபடியே உள்ளன.

சரண்ஜித் சிங் சண்ணியை முதல்வராக நியமித்தது, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பலனளிக்குமா? அல்லது ஜாட் சமூகத்தின் ஆதிக்கமுள்ள பஞ்சாப் அரசியலில் பின்னடைவைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..  


Next Story

மேலும் செய்திகள்