"தேர்தல் ஆணையத்தின் செயல்- சட்ட விரோதமில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : செப்டம்பர் 20, 2021, 01:07 PM
அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்றது, சட்டவிரோதம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது.

புதிய பதவிகளுக்கான தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில், அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்றும், புதிய பதவிக்கான தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உட்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதை தேர்தல் ஆணையம் ஆராய முடியாது என்று கூறிய நீதிபதிகள்,

உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக சிவில் வழக்குதான் தொடர முடியும் எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

245 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

233 views

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: "அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

66 views

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

46 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 views

பிற செய்திகள்

பேருந்து மோதி 3 கார்கள் சேதம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சாலையின் ஓரம் நிறுத்திவைக்கப்பட்ட கார் மீது கேரள அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

நில குத்தகை மோசடி மன்னன் மோன்சன் கைது - 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கேரளாவில் நில குத்தகை மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மோன்சனை 3 நாள் காவலில் எடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

10 views

கடற்படையின் கூட்டுப்பயிற்சி நிறைவு: ஜப்பானின் 2 போர் கப்பல்கள் புறப்பட்டன

நல்லெண்ண பயணமாக ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான KAGA , MURASAME என்ற 2 போர் கப்பல்கள் அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தன.

9 views

பிரேசில் நகரங்களைச் சூழ்ந்த மணற்புயல்: ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்த வானம்

பிரேசில் நகரங்களைக் கடுமையான மணற்புயல் தாக்கியது. சா பவுலோ மாநிலத்தில் உள்ள பல நகரங்கள் மணற்புயலால் சூழப்பட்டன.

129 views

வேதாரண்யத்தில் குவிந்த ரஷ்ய பறவைகள்: வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம்

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் இடும் பணியை பறவை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

16 views

ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் மனு - தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது அதிமுக கிளைச் செயலாளருக்கு கடந்த மாதம் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.