கே.சி.வீரமணி மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு - "கூடுதலாக 654 % சொத்து குவிப்பு"
பதிவு : செப்டம்பர் 16, 2021, 01:37 PM
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்துக்களை குவித்திருப்பதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த கே.சி.வீரமணி, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சராக இருந்த போது,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், கே.சி.வீரமணி மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் விஜய் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். 
கே.சி.வீரமணி 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் அளவுக்கு தனது வருமானத்தை விட அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, வருமானத்தை விட 654 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை குற்ற நிகழ்வு நடந்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.கே.சி.வீரமணி, தனது தாய் மற்றும் உறவினர்கள் பெயரில் சொத்து வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 83 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே கே.சி.வீரமணி சொத்து வைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால், அந்த காலக்கட்டத்தில் 28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் குவித்திருக்கிறார் என்றும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

571 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

108 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

49 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

37 views

மழை பாதிப்பு பகுதியில் ஆய்வு - மக்களுக்கு உணவு வழங்கினார் முதல்வர்

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், மக்களுக்கு உணவு வழங்கினார் .

24 views

பிற செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்கள் - விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, 500 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

6 views

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

20 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

21 views

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

10 views

(01/12/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

(01/12/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

24 views

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - அரசு நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், டெங்குவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.