திருப்பரங்குன்றத்தில் அரசு கல்லூரி ? - சட்டபேரவையில் அமைச்சர் பொன்முடி பதில்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 12:38 PM
அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை 15 சதவீதமாக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் கேள்வி பதில் நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்றும்


அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். 


இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 

12 பொறியியல் கல்லூரிகள், 17 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் இருப்பதாக குறிப்பிட்டார். 


ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் பட்சத்தில் 

வரும் ஆண்டுகளில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மேலும், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததால் 
அரசு கல்லூரிகளில் நடப்பாண்டு 25 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். 

அதே போல் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் ஏற்கனவே 10 சதவீதமாக இருக்கும் கூடுதல் மாணவர் சேர்க்கையை 15 சதவீதமாக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

19 views

நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்: ரூ.3,940 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் நிகழாண்டில் 3 ஆயிரத்து 940 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார்.

19 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

12 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

9 views

பிற செய்திகள்

ஆந்திராவிற்கு ரயில் மூலம் ரேசன் அரிசி கடத்தல் - 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில், ஆந்திராவிற்கு கடத்தப்பட இருந்த 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1 views

வேளாங்கண்ணி பேராலய திருவிழா நிறைவு- பேராலயத்தில் கொடி இறக்கம்

நாகை வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

1 views

திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் புகார்

காதல் திருமணம் செய்தவர்களை பெற்றோர்கள் மிரட்டுவதாகவும் உரிய பாதுகாப்பு தருமாறு காவல் நிலையத்தில் இளம் ஜோடி புகார் அளித்துள்ளனர்.

26 views

வளர்ப்பு பிராணிகளை வழங்க புதிய திட்டம்: கேரள அமைச்சர் தகவல்

கேரளாவில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள வளர்ப்பு பிராணிகளை அரசு அருங்காட்சியகத்தில் கொடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படுவதாக, அம்மாநில அமைச்சர் சிஞ்சுரணி தெரிவித்தார்.

5 views

ஆப்கானிஸ்தான் நிலவரம்: வல்லரசுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் அடுத்தடுத்து இந்தியா வருகை

ஆப்கானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், வல்லரசு நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வரிசையாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். இது குறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

5 views

பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

டெல்லியில் பெண் போலீஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வலுத்து வரும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.