குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
பதிவு : செப்டம்பர் 08, 2021, 07:12 PM
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது இந்திய குடியுரிமை திருத்த சட்டம்...

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் சட்டம் இது...

இந்த சூழலில் சட்டமன்றத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

முன்னதாக, சட்டபேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி,  அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய மு.க. ஸ்டாலின், 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அதிமுகவினர் வெளியேறினர் என்பதே உண்மை என தெரிவித்தார்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை எனக்கூறிய ஸ்டாலின், 

நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்

பின்னர் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்த இடத்திலாவது பாதிப்பு இருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் தமிழக பாஜக குரல் கொடுக்கும் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து அவையில் இருந்த திமுக, மதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சம்மதத்துடன் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

மின்வாரியத்தில் வேலை பெற்று தருவதாக மோசடி - தலைமைச் செயலக ஊழியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமைச் செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

6 views

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அலுவலர், கைது செய்யப்பட்டார்.

13 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

10 views

அத்துமீறிய குவாரி உரிமையாளர்கள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் குவாரி உரிமையாளர்கள் தாங்களாகவே அனுமதிச் சீட்டில் சீல் வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - "54,045 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன"

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இதுவரை 54 ஆயிரத்து 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

13 views

பாஜக கொடி கம்பம் வெட்டப்பட்ட சம்பவம்: பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம்

பாஜக கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.