"கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம்" - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2021, 07:03 PM
259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், 259 கல்லூரி விடுதிகளுக்கு உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும் என்றும் 40 விடுதிகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்  அறிவித்தார்.

விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்,காப்பாளிகளுக்கு 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.

259 கல்லூரி விடுதிகளில் மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டு கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நலவாரியங்களில் பதிவு பெற்ற குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் பெண்களுக்கு 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர்  அதிக எண்ணிக்கையில் பயன்படும் வகையில் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம், இலவச பித்தளை தீப்பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு எழுபத்தி இரண்டு ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட 30 அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

"மக்கள் நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை இம்மி பிசகாமல் அரசு காப்பாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

7 views

"4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

9 views

8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மனவளச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4 views

மதுரையை மிரட்டிய மின்னலின் காட்சிகள்: இரவு வானை ஒளிமயமாக்கிய மின்னல் காட்சிகள்

மதுரையில் விண்ணை அலங்கரித்த மின்னலின் காட்சிகளை ஒளிப்பதிவு கலைஞர் ஒருவர் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.

6 views

செப்.25 - பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்.பி.பி பாடல்களால் நிறைந்திருந்த ஓராண்டு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

18 views

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - பகீர் தகவல்கள்

ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் துறையில் பணியின்போது , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.