பத்திரிகையாளர்களுக்கான தமிழக அரசின் அறிவிப்புகள் என்னென்ன?
பதிவு : செப்டம்பர் 07, 2021, 10:03 PM
பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.சட்டப்பேரவையில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையின்போது பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.

இதழியல் துறையில் சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றும் இதழியலாளர் ஒருவர் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கருணாநிதி எழுதுகோல் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்திருக்கிறார்.

ஊடகத் துறையில் சிறந்து விளங்குவதற்காக, தகுதி வாய்ந்த இளம் பத்திரிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்திய அளவில் புகழ்மிக்க கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற நிதிஉதவி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் பத்திரிகையாளர்கள் சிறந்து விளங்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பயிற்சி வழங்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

பணிக்காலத்தில் காலமாகும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நிதி, 3 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில், பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்கிற முக்கிய அறிவிப்பும் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

13 views

ரிவால்டோ யானை விவகாரம் - வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

26 views

போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு - அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

நேரடி போட்டி தேர்வுகளுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தலைமைச் செயலர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

8 views

குழந்தையை அடித்து துன்புறுத்தும் நபர் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

குழந்தையை கையாலும் கயிறாலும் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது..

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.