விநாயகர் சதுர்த்தி "தடையை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்" - முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 07, 2021, 09:53 PM
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்த நிலையில், பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இருப்பினும், இதை ஏற்க மறுத்த இந்து முன்னணியினர், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள
நிலையில், தமிழகத்தில் மட்டும் தடை ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து போஸ்ட் கார்டு அனுப்ப வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்குமாறு, பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விநாயகர் சிலை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாயுடன், கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்றார். 

கேரளாவில் பண்டிகை கால தளர்வுகளால் கொரோனா அதிகரித்ததாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா முழுமையாக ஒழியவில்லை என்றும், விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை, தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

372 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

36 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கு நடவடிக்கை - சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டமுன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

6 views

விநாயகர் சதுர்த்தி - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை எனவும் அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

9 views

ஜெ. மரண வழக்கு - சட்டப்பேரவையில் விவாதம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டபேரவையில் வலியுறுத்தப்பட்டது.

13 views

எத்தலப்ப மன்னருக்கு மணிமண்டபம்... தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி

எத்தலப்ப மன்னருக்கு மணிமண்டபம்... தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி

11 views

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம்; அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொண்ட மாநகராட்சி பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12 views

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.