பத்திர பதிவு முறைகேடு - சிறப்பு குழு அமைப்பு
பதிவு : செப்டம்பர் 06, 2021, 08:19 PM
வணிகவரி துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் வணிகவரி மற்றும் பத்திரத்துறை அமைச்சர் மூர்த்தி பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார். அதில், வணிகவரித் துறையில் செங்கல்பட்டு, கடலூர்,திருவாரூர், உள்ளிட்ட 7 இடங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தார். வணிக வரித்துறையில்  புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்கவும், தணிக்கைகள் அதிகப்படுத்தவும் செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்படும் என கூறினார். போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். வணிகர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாக திருமண உதவி தொகை மற்றும் விபத்து இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். திருவாரூர்,திருவள்ளூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய வருவாய்க் கோட்டங்களின் தலைமை இடங்களில் ஐந்து புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தெரவித்தார் மேலும் பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் எனவும் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

54 views

பிற செய்திகள்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்: கடலுக்கு சென்ற மீனவருக்கு வெட்டுக்காயம்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வெட்டுக்காயமடைந்த மீனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 views

தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டி

புதுக்கோட்டை அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

34 views

"மக்கள் நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை இம்மி பிசகாமல் அரசு காப்பாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

10 views

"4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 202 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி இருப்பதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

11 views

8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மனவளச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5 views

மதுரையை மிரட்டிய மின்னலின் காட்சிகள்: இரவு வானை ஒளிமயமாக்கிய மின்னல் காட்சிகள்

மதுரையில் விண்ணை அலங்கரித்த மின்னலின் காட்சிகளை ஒளிப்பதிவு கலைஞர் ஒருவர் தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.