கொடைக்கானல் கட்டடங்கள் வரன்முறை - "வல்லுனர் குழுவில் மாற்றம்" : அமைச்சர் முத்துசாமி பேரவையில் தகவல்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 05:43 PM
கொடைக்கானலில் உள்ள கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்கான வல்லுனர் குழுவில் மாற்றம் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேரவையில் தெரிவித்தார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கொடைக்கானலில் உள்ள கட்டடங்களை வரன்முறை படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, கொடைக்கானலில் உள்ள கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்காக வல்லுனர் குழு ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அதில் சரியான நபர்கள் இல்லாததால், குழுவில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மாற்ரஙக்ள் செய்யப்பட்ட பின்பு, கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். நிபுணர் குழுவில் மாற்றம் செய்யக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பெறப்பட்ட ஆயிரத்து 496 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பொது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் வல்லுனர் குழு  அமைக்கப்பட்டு, பெரும்பாலானோரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

51 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தற்கொலை வழக்கு - தந்தையிடம் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை வழக்கில், அவரது தந்தையிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.'

1 views

மின்வாரியத்தில் வேலை பெற்று தருவதாக மோசடி - தலைமைச் செயலக ஊழியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தலைமைச் செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

7 views

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அலுவலர், கைது செய்யப்பட்டார்.

14 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

10 views

அத்துமீறிய குவாரி உரிமையாளர்கள்: வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு

தேனி மாவட்ட கனிமவளத் துறை அலுவலகத்தில் குவாரி உரிமையாளர்கள் தாங்களாகவே அனுமதிச் சீட்டில் சீல் வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 views

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - "54,045 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன"

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, இதுவரை 54 ஆயிரத்து 45 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.