"கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அண்ணாமலைக்கு சேகர்பாபு வேண்டுகோள்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 01:44 PM
அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது என்றும், வீட்டில் இருந்தே விநாயகரை வழிபட்டாலும், அவர்களின் கோரிக்கையை விநாயகர் ஏற்றுக் கொள்வார் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.