"அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை" - அமைச்சர் சேகர்பாபு
பதிவு : செப்டம்பர் 04, 2021, 04:12 PM
மாற்றம் : செப்டம்பர் 04, 2021, 04:32 PM
அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், இதற்காக ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக கோயில்களில் முடிகாணிக்கை  செலுத்த நாளை முதல் கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய 3 கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்றும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் திருமணம் நடைபெறும் போது மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருந்தால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.