"இடஒதுக்கீடு மட்டும் சமூகநீதி அல்ல" - "சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டமும்தான்" - திருமாவளவன்
பதிவு : செப்டம்பர் 04, 2021, 10:55 AM
சமூகநீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டுமல்ல என கூறியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், சமத்துவம் இன்மைக்கு எதிரான அனைத்து போராட்டமும் சமூகநீதி போராட்டம் தான் என தெரிவித்துள்ளார்.
சமூகநீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டுமல்ல என கூறியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், சமத்துவம் இன்மைக்கு எதிரான அனைத்து போராட்டமும் சமூகநீதி போராட்டம் தான் என தெரிவித்துள்ளார். அரக்கோணம் இரட்டை கொலை வழக்கு குறித்து உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நிகழ்வில் பேசிய திருமாவளவன், அனைத்து தரப்பிலும், ஜனநாயக பார்வை உள்ளோரைத்தான் நாம் ஜனநாயக சக்தி என்கிறோம் என்றார். ஒருவர் தவறு செய்தாலும், அந்த ஊரையே தாக்குவது, குடிசைகளை கொளுத்துவது போன்ற நிகழ்வுகள் மிகவும் கொடுமையானது என்ற திருமாவளவன், எனக்கும் அதிகாரம் வேண்டும் என்ற சமூக நீதிக்கான போராட்டத்தில்தான், அர்ஜூன், சூர்யா இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.