கொரோனா 3வது அலை... தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
x
கொரோனா மூன்றாவது அலையில் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூலை 28ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 230ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 
 
சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சை, திருவள்ளூரில் கணிசமாக தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஓபிஎஸ், 
 
கேரளாவில் தொற்று வேகமாக பரவுவதால், கோவை, தேனி, கன்னியாகுமரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வருவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
 
விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை மூடியுள்ளது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம்,
 
மற்ற பகுதிகளில் சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதாக விமர்சித்துள்ளார்.
 
முதலமைச்சர் தனிகவனம் செலுத்தி கட்டுப்பாடுகள் 100 சதவீதம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து மூன்றாவது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்