எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்துக்கள் - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்.ஐ.ஆர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீத சொத்துக்களை குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.
x
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீத சொத்துக்களை குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், 

கரூர், சென்னையில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் கடந்த 22 ஆம் தேதி சோதனையை மேற்கொண்டனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரின் சகோதரர் சேகர் அகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,

எம்.ஆர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீத சொத்துக்களை குவித்துள்ளார் என எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் 2 கோடியே 51 லட்சம் 91 ஆயிரத்து 378 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 8 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 648 ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் இருந்த இந்த காலக்கட்டத்தில் அவர் 6 கோடியே  10 லட்சத்து 44 ஆயிரத்து 270 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளார் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது சகோதரருடன் இணைந்து நடத்தும் ரெயின்போ டயர்ஸ் நிறுவனம் மூலம் கரூரில் 6 இடங்களில் 2 கோடியே 90 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளார் என்றும்

ரெயின்போ புளுமெட்டல் நிறுவனம் மூலம் கரூரில் 2 இடங்களில் 4 கோடியே 48 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளார் என்றும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்