சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
x
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது, சார்பட்டா பரம்பரை திரைப்படம். 70களில் வடசென்னை மக்களின் வாழ்வியலோடு ஒன்றி இருந்த குத்துச்சண்டை விளையாட்டை பற்றிப் பேசுகிறது, இந்தப் படம்.

இதில், பசுபதி போன்ற பிரதான கதாபாத்திரங்களை திமுகவைச் சேர்ந்தவர்களாக காட்சிப்படுத்தி இருக்கிறார், பா.ரஞ்சித். அதேசமயம், எம்.ஜி.ஆர். மற்றும் அதிமுக குறித்த கருத்துகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரசாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். குறிப்பாக, குத்துச்சண்டை விளையாட்டை மிகவும் நேசித்த தலைவர் எம்.ஜி.ஆர். என்றும், அவரது படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1980ல் தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டியில், நாக்-அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்து பங்கேற்க வைத்தவர் என குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார், இப்படி, எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்து இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டுமல்ல, கலைஞனுக்கும் அழகல்ல என்றும், பா.ரஞ்சித்தின் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்