நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பதில்

கொரோனா தொற்றை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை -  தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பதில்
x
கொரோனா தொற்றை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனாவின் 3வது அலை அச்சம் இருப்பதால் நீட்  தேர்வு ரத்து குறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார இணை அமைச்சர் பிரவீன் பாரதி, முதுகலை நீட் தேர்வு செப்டம்பர் 11 ம் தேதியும், இளங்கலை தேர்வு 12ம் தேதியும் நடைபெறும் என்றார். மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து நீட் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்