விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் - காங்கிரசுக்கு சிக்கலா...?

தேர்தல் நடக்கவிருக்கும் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு சிக்கலா...? என்ற ரீதியில் அங்கு உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது.
x
தேர்தல் நடக்கவிருக்கும் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு சிக்கலா...? என்ற ரீதியில் அங்கு உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது.  

கடந்த சில வருடங்களாக மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் முக்கிய மாநிலங்களில் ஒன்று பஞ்சாப்.

முன்னாள் ராணுவ கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வருகிறார். அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதனால் மாநில காங்கிரசுக்குள் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. அமரீந்தர் சிங் மற்றும் சித்து தலைமையில் அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் இரண்டு அணியாக உள்ளனர். 

சொந்த கட்சி அரசாங்கம் மீது சித்து வைக்கும் விமர்சனங்கள், காங்கிரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்லலாம் எனவும் செய்திகள் அடிப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த மாதம் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் சித்துவை சமாதானம் செய்தனர். அப்போது சூழலை ஆய்வு செய்ய கட்சி அமைத்த 3 பேர் கொண்ட குழு,  நிர்வாகிகளிடம் பேசிய பிறகு அறிக்கையை தலைமையிடம் வழங்கியுள்ளது.  

இதனைதொடர்ந்து சித்துவை மாநில தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமனம் செய்யுள்ளதாக தகவல் வெளியாகியது. 

 சித்துவை கட்சி தலைவராகவும், அமரீந்தர் சிங்கை முதல்வர் வேட்பாளராகவும் கொண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் அமைப்பது தெரியவந்தது. 
 
இந்நிலையில்தான் டெல்லியில் சோனியா காந்தியை சித்து  சந்தித்து பேசினார். ஆனால் சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் எந்த ஒரு தகவலையும் பகிரவில்லை.

அவருடன் இருந்த மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், சோனியா காந்தியே இறுதி முடிவை எடுப்பார் என்றார். ஆனால் சித்துவை காங்கிரஸ் மாநிலத் தலைவராக அறிவிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமரீந்தர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 

ஏற்கனவே சித்துவை நியமனம் செய்யும் போது அமரீந்தர் சிங் கூடாரம் காலியாகும் என்ற எச்சரிக்கை நிலவுகிறது. 

இதற்கிடையே, இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை கட்சி தலைராக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கும் சோனியாவிடம் அம்ரீந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

தேர்தல் நெருங்கும் வேளையில் பஞ்சாப்பில் வலுக்கும் உட்கட்சிப் பூசல் காங்கிரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்