புதுச்சேரி அமைச்சர்கள் இலாகா வெளியீடு

புதுச்சேரி மாநில அமைச்சர்களின் இலாகா பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
x

புதுச்சேரி மாநில அமைச்சர்களின் இலாகா பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் படி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவு, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
உள்துறை, மின்துறை, கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு, பொதுப்பணி, சுற்றுலா, மீன்வளம், சட்டம் மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு விவசாயம், கால்நடைத்துறை, வனம் மற்றும் வனவிலங்கு நலம், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன.  போக்குவரத்துறை அமைச்சர் சந்திரா பிரியாங்காவிற்கு ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டு வசதி, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, கலை மற்றும் கலாச்சாரம் , பொருளாதாரம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உணவுபொருள் வழங்கல்துறை அமைச்சர் சரவண குமாருக்கு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரம், ஊரக அடிப்படை சேவை, தீயணைப்புத்துறை, சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்