"தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" - அமைச்சர் ரகுபதி உறுதி
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், மக்களின் தேவையை அரசு பூர்த்தி செய்யும் எனவும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
Next Story
