"முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் தொடக்கம்" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பதிவு : ஜூலை 09, 2021, 06:58 PM
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். சென்னையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,   முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை பொதுமக்களுக்கு அறிவிக்க  இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.இதுவரை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு 472 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.