தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்து வந்த பாதை
பதிவு : ஜூலை 09, 2021, 12:03 AM
மாற்றம் : ஜூலை 09, 2021, 12:09 AM
தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எ​ஸ் அண்ணாமலை, அக்கட்சி தலைமையினால் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை கடந்த வந்த பாதையை பார்ப்போம்.
தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எ​ஸ் அண்ணாமலை, அக்கட்சி தலைமையினால் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை கடந்த வந்த பாதையை பார்ப்போம். 

கடந்த 1984 - ல் ஜூன் 4 ஆம் தேதி கரூரில் பிறந்து பொறியியல் பட்டப்படிப்பை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் முடித்தார். 

பின்னர் லக்னோ ஐஐடியில் எம்பிஏ பட்டப் படிப்பை முடித்து, பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்று, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் துணை கண்காணிப்பாளராக 2013 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அதே மாவட்டத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற இவர் 2016 ஆம் ஆண்டு வரை அந்த மாவட்டத்தில் பணிபுரிந்தார். 

பின்னர் அங்கிருந்து சிக்மகளூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் மதரீதியான பிரச்சினையை அவர் கையாண்ட விதத்தை கொண்டு கர்நாடகாவின் சிங்கம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 

2018 ஆம் ஆண்டு, பெங்களூரு நகர தெற்கு மண்டலத்தில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் பணியாற்றிய அவர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். 

பின்னர், சொந்த ஊருக்கு திரும்பிய அண்ணாமலை அங்கு உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று இளைஞர்களை ஒன்று திரட்டி பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 67 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்றார். 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக பாஜக தலைமை அவரை நியமித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

கும்பாபிஷேகம் செய்யப்படாத கோவில்கள் "விரைவில் குடமுழுக்கு செய்யப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களைத் தெரியாமல் கிரயம் செய்து வைத்திருந்தாலும் தவறுதான் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

8 views

வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு

வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....

10 views

ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

27 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

22 views

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3221 views

புதிய துணைவேந்தர்கள் நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.