அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு... நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் தோல்வி குறித்து அதிமுக - பாஜகவினர் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில், கூட்டணி தொடரும் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ஓபிஎஸ் - இபிஎஸ். நாளை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...
x
தேர்தல் தோல்வி குறித்து அதிமுக - பாஜகவினர் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில், கூட்டணி தொடரும் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ஓபிஎஸ் - இபிஎஸ். நாளை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைவதற்கு காரணம் பாஜக தான் என்ற கருத்தை பதிவு செய்து அதிமுக கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்...

இதற்கு பதிலடியாக உங்களால் தான் நாங்கள் தோல்வியுற்றோம் என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு என பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது

 கட்சிக்குள் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக்கூறி ஜெயக்குமார் சமாமதானம் செய்ய முயற்சிக்க, பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாடு நலன் கருதியும் அதிமுக கூட்டணி தொடரும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனித்து அறிக்கை வெளியிட்டார்.

கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட சூழலில், ஓபிஎஸ் மட்டும் தனித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரே என கருத்துகள் வெளிவர தொடங்கிய நிலையில்,  அன்று மாலையே ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டனர். 

அதில், தேர்தல் வெற்றி தோல்விகள், பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல எனவும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது என கட்சியினருக்கு வெளிப்படுத்தினர். 

கூட்டணியில் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் யாருக்கும், எப்போதும், எவ்வித அச்சமும் எழத் தேவையில்லை என அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் ஓபிஎஸ் - இபிஎஸ்...


ஆனாலும், அமைச்சர் சி.வி சண்முகத்தின் பேச்சு உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கலாம் என கருத்து பகிர்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அதிமுக பாஜக கூட்டணி, சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே தான் எனவும், எதிர்வரும் தேர்தலில் கட்சிக்குள் ஆலோசனை நடத்தி தான் முடிவு அறிவிப்பார்கள் என கூறுகிறார் பத்திரிகையாளர் துரை கருணா

தேர்தலுக்கு முன்பே இதுபோன்ற சலசலப்புகள் இருந்ததாகவும், இந்தப் பேச்சுகள் இன்னும் சில மாதங்கள் தொடரும் என சுமந்த் சி ராமன் தெரிவிக்கிறார்.

நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடக்கலாம் என்பதும் அரசியல் நிபுணர்கள் கருத்தாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்