அரியவகை மரபணு நோயால் குழந்தை பாதிப்பு - பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்
பதிவு : ஜூலை 01, 2021, 08:25 AM
குமாரபாளையத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற பிரதமர் மோடி உதவ வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
அரியவகை மரபணு நோயால் குழந்தை பாதிப்பு - பிரதமர் மோடிக்கு வைகோ வேண்டுகோள்

குமாரபாளையத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்ற பிரதமர் மோடி உதவ வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர், 23 மாத பெண் குழந்தையான மித்ரா. இவர் ஆட்டோசோமல் ரெசெஸ்ஸிவ் ஸ்பைனல் ஆட்ரோஃபி என்ற அரியவகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டி, பிரதமர் மோடிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்த நோயைக் குணப்படுத்தும் ஒரே மருந்தான ஜோல்ஜென்ஸ்மாவின் விலை 16 கோடி ரூபாய் என்றும், குழந்தை இரண்டு வயதை நிறைவு செய்வதற்குள் இதனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் நிறுவனம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இஷானி என்ற குழந்தைக்கு, குலுக்கல் முறையில் இந்த மருந்தை இலவசமாக வழங்கியதை சுட்டிக் காட்டியுள்ள வைகோ, அதே நிறுவனத்திடம் இருந்து ஜோல்ஜென்ஸ்மா மருந்தை, தமிழ்நாட்டுக் குழந்தை மித்ராவுக்கு பெற்றுத் தந்து, உயிரைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

32 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

சமூகநீதி - கண்காணிக்க குழு அமைக்க முடிவு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10 views

"சோதனை என்ற கபட நாடகம் அரங்கேற்றம்; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - அதிமுக தலைமை கடும் குற்றச்சாட்டு

சோதனை என்ற பெயரில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளார்.

22 views

"நீட் தேர்வு-தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீட் தேர்வுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.

18 views

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..

32 views

கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு - முதல் தகவல் அறிக்கை விவரங்கள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

52 views

கே.சி.வீரமணி மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு - "கூடுதலாக 654 % சொத்து குவிப்பு"

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்துக்களை குவித்திருப்பதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.