"மளிகை தொகுப்பு பைகள் வழங்கப்படவில்லை" முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட வேண்டுகோள்
பதிவு : ஜூன் 24, 2021, 12:01 AM
14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
"மளிகை தொகுப்பு பைகள் வழங்கப்படவில்லை" முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட வேண்டுகோள்   

14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பல்வேறு ரேஷன் கடைகளுக்கு, மளிகைத் தொகுப்பு வழங்கப்படவில்லை என்றும், அதனால், பொருட்களை கேட்கும் மக்களுக்கு வழங்க முடியாமல், ரேஷன் ஊழியர்கள் தவிப்பதாகவும் கூறியுள்ளார். மளிகை தொகுப்பு பெறாத மக்கள், ரேஷன் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் செய்தி வருவதாக கூறியுள்ள அவர், குறைவான பொருட்கள் மட்டும் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்ட​ மக்கள், மளிகை தொகுப்பை பெறமுடியாமல் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து இடங்களுக்கும் மளிகைத் தொகுப்பு வழங்கவும், அனைவருக்கும் கிடைக்கவும், முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - ஆயத்த பணியில் அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

9 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

35 views

கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்காதது குறித்து கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல - அமைச்சர் துரைமுருகன்

கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து அதிமுக சொல்லும் கருத்து ஏற்கத்தக்கதல்ல என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

56 views

கோவிட்டைப் போல சமநிலையான மனம்; ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு கூடாது - கமல்ஹாசன்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இலவச கொரோனா தடுப்பூசி முகாமினை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

45 views

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக - தேமுதிக

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப் படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

197 views

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 4ஆம்தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.