நீட் விலக்கு உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
பதிவு : ஜூன் 23, 2021, 06:27 PM
மாற்றம் : ஜூன் 23, 2021, 06:30 PM
நீட் தேர்வில் இருந்து உறுதியாக விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுகவால் நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்ததாக குற்றம்சாட்டினார்.அதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை அவையில் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும் மறைந்த முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்ததாகவும் விமர்சித்தார். இதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கருணாநிதி ஆட்சியிலிருந்த வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை என விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டரீதியாக முயற்சித்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமரை சந்திக்கும் போது
ஒரு முறைக்கு இரு முறை அழுத்தமாக சொல்லியிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான, குழு அளிக்கும் பரிந்துரையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீட் தேர்விலிருந்து நிச்சயம் தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் குழப்பமான மன நிலையில் இருப்பதால் தேர்வு நடைபெறுமா ? நடைபெறாதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நீங்களும் துணை நிற்க வேண்டும்
என கேட்டுக்கொண்டார்.அதற்கு கண்டிப்பாக துணை நிற்போம் என எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

14 views

தொழிற்கல்வி படிப்பு அரசு மாணவர்களுக்கு சலுகை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

மாணவர்களுக்கான, பொறியியல் சேர்க்கை அட்டவணையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

6 views

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

12 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.