"நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 23, 2021, 05:49 PM
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவிடம் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவிடம் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜனிடம், திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவை, உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அந்த மனுவில், அனிதா தொடங்கி 13 மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தாலும் சிறப்பு பயிற்சி இல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையே இருப்பதாக மனுவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை விட, நீட் தேர்வு மூலம் எந்தவித தகுதி, திறமை சோதிக்கப்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான சான்று இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பாக உள்ள மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாக நீட்தேர்வு அமைந்திருக்கிறது என்றும் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை திணிக்கும் நீட்தேர்வு, அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் கனவுகளை மட்டும் இல்லாமல், உயிரையே பறிக்கும் ஆபத்தாக நீட் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பரிந்துரை அறிக்கை அமையவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல் - பார்ப்போரை பதற வைக்கும் காட்சிகள்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பீர் பாட்டிலால் ஒருவரை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

12 views

தொழிற்கல்வி படிப்பு அரசு மாணவர்களுக்கு சலுகை - தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்

மாணவர்களுக்கான, பொறியியல் சேர்க்கை அட்டவணையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

6 views

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

12 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.