"அரசு பணியில் பிற மாநிலத்தவர் - ஆய்வு செய்து நடவடிக்கை" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பதிவு : ஜூன் 22, 2021, 06:33 PM
தமிழகத்தில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன்,  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். மேலும், தமிழக அரசுக்கு 5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் எப்படி வந்தது என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் எனவும், நிதி இழப்புக்கான காரணம் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து, பிற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்பப்பட்டது என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். மேலும், தமிழக அரசின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்களை தன்னிடம் வழங்கினால் அதையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

304 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

22 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

32 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.