மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு - 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம்

சிறுதுறைமுகங்கள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள மசோதாவை, ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க 9 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
x

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2021 தொடர்பாக உங்கள் கவனத்தை ஈர்க்க விளைகிறேன் என தெரிவித்துள்ளார். 

மாநிலங்கள் வசம் தற்போது சிறுதுறைமுகங்கள் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல முயல்வதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுதொடர்பாக வரும் 24 ஆம் தேதி கூட்டியுள்ள கூட்டத்தில் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநில அரசுகளின் அதிகாரத்தை செயல் இழக்கச் செய்யும் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்