சோனியா - ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு... அரசியல் முக்கியத்துவம் பெற காரணம் என்ன ?

தனது இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது..
x
தனது இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது..  


முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக அரசின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தார்....

இதனால் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்கள் கைவிடப்படலாம் என அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

"ஹைட்ரோ கார்பன், எட்டு வழி சாலை திட்டம்"
"திட்டங்களை கொண்டு வர கூடாது என மனு" 
"மாநில அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம்" 
"தமிழக அரசின் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு"  

டெல்லி பயணத்தின் இரண்டாவது நாளில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை, தனது மனைவி துர்காவுடன், முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். 

அக்பர் சாலையில் உள்ளசோனியா காந்தி  இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சோனியா காந்திக்கு புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். 


இதனையடுத்து, கருணாநிதி காலந்தொட்டே தொடரும் உறவு இது என்றும், இந்த சந்திப்பை நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன் என்றும் நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

இதே போல் தமிழக மக்களின் வலிமைக்கும், வளத்திற்கும் ஏதுவாக தொடர்ந்து தி.மு.க. உடன் காங்கிரஸ் கட்சி இணைந்து பாடுபடும் என உறுதியளித்திருக்கிறார், ராகுல் காந்தி

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவதில் ஸ்டாலின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் பிரியன்... 


"கம்யூ., காங்கிரஸுடன் மம்தாவை இணைப்பது ?"
"பல கட்சிகளின் இணைப்பு அவசியமாகிறது" 
"பாஜகவிற்கு எதிரான மாற்று அணி" 
"உந்து சக்தியாக ஸ்டாலின் திகழ்வார்"

கொரோனா காலம் தொடங்கியது முதல் இதுவரை யாரையும நேரில் சந்திக்காமல் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த காலக்கட்டத்தில் முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார் என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று...



Next Story

மேலும் செய்திகள்