புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
x
புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். புதுச்சேரி சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. என்ஆர்காங்கிரஸ்- பாஜக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி எம்எல்ஏ செல்வம் தவிர, இதுவரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் பதவி ஏற்க உள்ளார். புதுச்சேரியில் முதல் முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்