லோக் ஜனசக்தி கட்சி - வலுக்கும் மோதல் : சிராக் பாஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.க்கள

லோக் ஜனசக்தி கட்சியில் வலுக்கும் உட்கட்சி மோதலால், கட்சி பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி - வலுக்கும் மோதல் : சிராக் பாஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.க்கள
x
முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவராகவும் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு கட்சித் தலைவராக பொறுப்பேற்ற சிராக் பாஸ்வானுக்கு எதிராக அக்கட்சியில் உட்கட்சி பூசல் வலுத்துள்ளது. கட்சியில் உள்ள 5 எம்பிக்களும், சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த அதிருப்தி அணிக்கு சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும் ஹாஜிப்பூர் தொகுதி எம்.பியுமான பசுபதிகுமார் பாரஸ் தலைமையேற்றிருப்பதாக கூறப்படுகிறது. மக்களவையில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்குமாறும், லோக் ஜனசக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வானை நீக்குமாறும் 5 எம்பிக்களும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த அதிருப்தி அணியினர் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தங்களது ஆதரவை வழங்குவார்கள் என்றும் பசுபதி குமார் பாரஸ்-க்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து லோக் ஜன சக்தி கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பசுபதி குமார் பாரஸை சமாதானம் செய்யும் முயற்சியில் சிராக் பாஸ்வான் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்